கவிதை நாக்கால் ருசியறிந்து
அணுத்துகள் சிதைத்துத் தாண்டிய விழியம்பால்
கிழித்துக் கொண்ட கனவின்
கடைசிப் பாடல்!
அது
சருகுகளின் நுனியில் உடையும்
தூசுப்படிமங்களின் சல்லடைக்குள்
பலியிடப்பட்ட விதியின்
சப்தநாடிகள் ஓய்வெடுக்கும்
கிரகங்களில் தெறித்திடும்
எச்சத்தின் மிச்சத் துளியில்
எறும்பொன்றின் கால்தடம்
நுண்நுட்பமாய் தேய்ந்து
எரிகிறது... முடிவுகளுக்கான
முதல் ஞாபகமென!!!
Tuesday, November 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)

அட்டகாசம் ....!!!!
ReplyDelete